இலகு ரயில் திட்டம் தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் - ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்த எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 13, 2024

இலகு ரயில் திட்டம் தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் - ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்த எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.மனோசித்ரா)

ராஜபக்ஷ அரசாங்கத்தில் எவ்வித அடிப்படை காரணிகளும் இன்றி இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டம் தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பான் நிதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு (12) (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஜப்பான் தனது பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மூலம் அதன் ஏற்றுமதித் துறையை எவ்வாறு மேம்படுத்த முடிந்தது என்பது உட்பட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஜப்பானின் புனரமைப்பு அனுபவத்திலிருந்து இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்துச் செய்வதற்கு முன்னைய ராஜபக்ச அரசாங்கம் எடுத்த தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானத்திற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது கட்சியின் கீழ் அமைக்கப்படும் அரசாங்கத்தில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் நிதியமைச்சரிடம் உறுதியளித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் அல்லது ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து பல வருடங்களாக பெற்ற ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பான் நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். ஜப்பானின் வட பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment