இன, மதவாதமற்ற, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதோரை இணைத்துக் கொள்ள திட்டம் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, January 5, 2024

இன, மதவாதமற்ற, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதோரை இணைத்துக் கொள்ள திட்டம் - ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியினால் நாட்டில் வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன, இனவாத, மத வாதமற்ற, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத சிறந்த குழவினரை ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது பல்வேறு கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒரு குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியில் நேரடியாக இணைந்து கொள்கின்றனர். மற்றொரு குழு ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்கின்றனர்.

நாட்டில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் கூட்டணிகளாலேயே வெற்றி பெற்றுள்ளன. இறுதியாக 1977 இல் தான் தனிக் கட்சியாக வெற்றி பெற்றது. இதன் பிறகு அமைந்த அரசாங்கங்கள் கூட்டணியில்தான் வெற்றி பெற்றன.

எதிர்காலத்தில் ஊழல், இனவாத, மத பேதமற்ற குற்றச்சாட்டுகள் இல்லாத சுத்தமான குழுவினரை ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக்கு பயப்படுகின்றன.

ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும் இயலுமையைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தாம் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மொட்டுவின் பொது வேட்பாளர் தான் என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறு பார்க்கும்போது அரசாங்கத்திற்குள் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

No comments:

Post a Comment