தீவிர டெங்கு தொற்றால் சுயநினைவை இழந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தளையைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்செலாகே ஹாசினி பாக்யா என்ற இளம் யுவதியே உயிரிழந்தவராவார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
யுவதியை பல்வேறு பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்த வைத்தியர்கள் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று (16) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியாவார்.
No comments:
Post a Comment