தீ வைத்து கொல்ல முயற்சி : சந்தேகநபரை தேடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Friday, January 12, 2024

தீ வைத்து கொல்ல முயற்சி : சந்தேகநபரை தேடும் பொலிஸார்

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தினால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஜனவரி 01ஆம் திகதி ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேற்படி சந்தேகநபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

071 7478912
071 8594423
011 2323356

No comments:

Post a Comment