மின்சார சபை அறிமுகப்படுத்திய அவசர தொலைபேசி இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 17, 2024

மின்சார சபை அறிமுகப்படுத்திய அவசர தொலைபேசி இலக்கம்

இலங்கை மின்சார சபை அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மின் கம்பிகள் காரணமாக யானைகள் பலி எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, '1987' என்ற எண்ணின் மூலம், வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அங்கீகரிக்கப்படாத மின்சார இணைப்பு தொடர்பான தகவல்களை மக்கள் வழங்க முடியும்.

அத்தோடு, 2023ஆம் ஆண்டு அனுமதியின்றி மின் கம்பிகள் பதிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment