நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 4, 2023

நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய்

நாட­ளா­விய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இதுவரை 69 ஆயிரத்து 231 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் 33 ஆயிரத்து 139 டெங்கு நோயாளர்களும் மாவட்ட ரீதியில் கொழும்பு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 634 டெங்கு நோயாளர்களும் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 4 ஆயிரத்து 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நவம்பரில் இதுவரை 738 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 39 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயநிலை காணப்படுவதால் பொதுமக்கள் தமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment