சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி பலி : 6 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 15, 2023

சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி பலி : 6 பேர் காயம்

வெல்லம்பிட்டிய - வேரகொட பிரதேசத்தில் இன்று (15) காலை தர்மவிஜய வித்தியாலய பாடசாலை நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தரம் 1 இல் கல்வி பயின்று வந்த 6 வயது மாணவியே சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்தார்.

சுவரின் ஒரு பகுதியை தூக்கி அகற்ற முற்பட்டபோது மறுபுறம் இருந்த குறித்த மாணவியின் தலைப்பகுதி நசுக்கப்பட்டதால் பலத்த காயமடைந்த குறித்த மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்ததாக பிரதேச பெண் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் மேலும் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 5 மாணவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த இவ்வனர்த்தம் தொடர்பில் கிரான்பாஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment