சமனலவெவ நீர்த் தேக்கத்தில் இரத்தினக்கல் அகழ்வுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு இடமளித்தால் வெடிப்புகள் ஏற்பட்டு நீர் கசிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் நீர்த் தேக்கத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் கபில அபேவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நீர் மட்டம் குறைவடைந்துள்ள சூழ்நிலையில் நிலப்பரப்பில் புதைந்துள்ள இரத்தினக்கல் கனியத்தை அகழ்ந்து எடுப்பதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு சமனலவெவ நீர்த் தேக்கத்தில் இரத்தினக்கல் அகழ்வுக்கு இடமளித்தால் அங்கு மேலும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
சமனலவெவ நீர்த் தேக்கத்தின் மேற்பகுதியில் சுமார் ஒரு அடியளவில் மண்படை காணப்படுகின்றது. அத்துடன் பிரதேச தரையமைப்பில் இயற்கையான சிதைவுகள் காணப்படுகின்றன. எனவே இவ்வாறான ஒரு தரையமைப்பில் இரத்தினக்கல் அகழ்வுக்காக நிலத்தை தோண்டுவது நீர்த் தேக்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெடிப்புகளுக்கு மேலதிகமாக மேலும் புதிய வெடிப்புகள், ஓட்டைகள் ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment