19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கதை வெற்றி கொண்டார்.
தருஷி கருணாரத்ன 2.3 நிமிடங்களில் போட்டித் தூரத்தை கடந்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம் பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்
போட்டியின் வௌ்ளிப்பதக்கத்தை இந்தியாவும், வெண்கல பதக்கத்தை சீனாவும் பெற்றன.
2002 ஆம் ஆண்டுக்கு பிறகு மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இலங்கை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது சந்தர்ப்பமாகவும் இன்றைய வெற்றி பதிவாகியுள்ளது.
19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் Hangzhou-வில் இடம்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment