பைடனுக்கு பதிலடியாக உயிரிழந்தோர் பட்டியலை வெளியிட்டது பலஸ்தீன் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 28, 2023

பைடனுக்கு பதிலடியாக உயிரிழந்தோர் பட்டியலை வெளியிட்டது பலஸ்தீன்

இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேள்வி எழுப்பியதை அடுத்து நேற்றுமுன்தினம் வரை கொல்லப்பட்ட 7,028 பேரின் பெயர் பட்டியலை பலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், காசா தரப்பு வழங்கி இருக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் காசா சுகாதார அமைச்சு 210 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொல்லப்பட்டவர்களின் பெயர், வயது, பால் மற்றும் அடையாள அட்டை இலக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிர்வாகம் மனிதத் தரங்கள், தார்மீகங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை பெறுமானங்களற்ற வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையை வெட்ககரமான முறையில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த அறிக்கையில் கூறப்பட்டதை விடவும் உயிரிழப்பு எண்ணிக்கைய அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment