கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம் : பொலிஸார் நீர், கண்ணீர்ப்புகைப் பிரயோகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 24, 2023

கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம் : பொலிஸார் நீர், கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

பெலவத்தை - பாலம்துன சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

ஆசிரியர் சங்கத்தால் இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் போராட்டக்காரர்கள் பாலம்துன சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக பொரளை - கொட்டாவ வீதி (174 பாதை) போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment