ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இன்று (05) கடமையில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் விடுமுறையை அறிவித்திருந்த ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (05) மாலைக்குள் ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வரும் பணியில் ரயில்வே திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.
மாளிகாவத்தை ரயில் வீதியின் நுழைவாயிலில் வைத்து ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர், உப கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment