எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை சுத்தம் செய்து பேண வேண்டும் என நளின் ஆரியரத்ன வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment