நிலுவைத் தொகைகளை செலுத்த விசேட அமைச்சரவைப்பத்திரம் - ரமேஷ் பத்திரன - News View

About Us

About Us

Breaking

Sunday, October 29, 2023

நிலுவைத் தொகைகளை செலுத்த விசேட அமைச்சரவைப்பத்திரம் - ரமேஷ் பத்திரன

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் பல்வேறு விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்துவதற்கான நிதியினை விடுவிப்பதற்கான விசேட அமைச்சரவைப்பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்துறை மாற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மருந்துகளுக்கான கட்டணம் செலுத்தல் தொடர்பில் சுகாதார மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தோம். அச்சமயத்தில், விசேட அமைச்சரவை அனுமதியின் கீழ் ஒதுக்குவதற்கு தேசிய வரவு, செலவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப்பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்குமாறு வரவு, செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருந்துகளை கொள்வனவு செய்தல் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துதல் போன்ற அத்தியாவசிய சுகாதார செலவுகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், போலி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மருந்துகளை இறக்குமதி செய்வதை தடுப்பதற்கும் விசேட நடவடிக்கைகளை சுங்க திணைக்களத்துடன் கூட்டிணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் வெகு விரைவில் மருந்து தட்டுப்பாடுகள் தொடர்பான விடயங்கள் மற்றும் தரம்குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

No comments:

Post a Comment