பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பகுதியில் உள்ள குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வழங்கிய முறைபாட்டுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 27 வயதான களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு இவர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடம் இருந்து 6.2 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைவஸ்துக்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர் களுத்துறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment