15 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் பறிமுதல் : திடீர் பரிசோதனையில் சிக்கியது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 24, 2023

15 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் பறிமுதல் : திடீர் பரிசோதனையில் சிக்கியது

முல்லைதீவு மாவட்டத்தின் வவுனிக் குளத்தில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையினர் இன்று (24) அதிகாலை 2.00‌ மணியலவில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது சுமார் 15 இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு மட்டுமன்றி நன்னீர் மீன் வளங்கள் உட்பட நீர் நிலைகளின் சூழலும் பாதிப்படைகின்றன. 

எனவே மீனவர்கள் பெருமளவு தொகை நிதியினை செலவு செய்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கினறோம் எனத் தெரிவித்த குமாரகுலசிங்கம் சங்கீதன் அவர்கள் கைப்பற்ற வலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment