Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 4, 2023

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,
12.5kg சிலிண்டர் : ரூ. 145 இனால் அதிகரிப்பு
5kg சிலிண்டர் : ரூ. 59 இனால் அதிகரிப்பு

அதன் அடிப்படையில்,
12.5kg : ரூ. 3,690 இலிருந்து ரூ. 3,835 ஆக ரூ. 145 இனால் அதிகரிப்பு
5kg : ரூ. 1,476 இலிருந்து ரூ. 1,535 ஆக ரூ. 59 இனால் அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கபிபட்டிருந்தது.

அதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் 12.5kg சிலிண்டர்: ரூ. 300 இனால் குறைக்கப்பட்டதோடு, 5kg சிலிண்டர்: ரூ. 120 இனால் குறைக்கப்பட்டிருந்தன.

ஏப்ரல் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

12.5kg சிலிண்டர் : ரூ. 1,290 இனால் குறைப்பு (ரூ. 3,990)
5kg சிலிண்டர் : ரூ. 516 இனால் குறைப்பு (ரூ. 1,596)

No comments:

Post a Comment