இலங்கைக்கான இரண்டாம் தவணைக் கடன் தாமதமாகலாம் : IMF தூதுக்குழு தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 27, 2023

இலங்கைக்கான இரண்டாம் தவணைக் கடன் தாமதமாகலாம் : IMF தூதுக்குழு தலைவர்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு குறித்த கலந்துரையாடலுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பில் இன்று (27) கூடியது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை அதிகாரிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று மாலை இலங்கை மத்திய வங்கியில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் Peter Breuer மற்றும் Katsiaryna Svirydzenka ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கை தனது திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் தாமதமாகலாம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

இரண்டாவது தவணைக் கடன் எப்போதும் வழங்கப்படும என்பது குறித்து நிலையான கால அட்டவணை எதனையும் தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் Peter Breuer  தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் Peter Breuer  தெரிவித்துள்ளார்.

இலங்கை இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் திருப்தியடைவதற்கு இரண்டு விடயங்கள் அவசியம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் கொள்கைள் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் நாங்கள் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டும். அதுவே நாங்கள் முன்னேறிச் செல்ல உதவும். அதன் மூலமே நாங்கள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஒரு விடயத்தில் ஒரு வருடத்தில் குறைபாடுகள் உள்ளதை நாங்கள் காணமுடிகின்றது அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment