இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சம்மேளன நடவடிக்கைகளுக்காக நிலைப்படுத்தல் குழுவை நியமிக்க வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ரக்பி நிலைப்படுத்தல் குழுவை இரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை நேற்று (25) விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி , விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், 06 மாத காலத்திற்கு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் பேணுவதற்கான தற்காலிக செயற்பாடாக இலங்கை ரக்பிக்கான நிலைப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தே விளையாட்டுத்துறை அமைச்சர் இப்புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி வருமாறு
No comments:
Post a Comment