(எம்.மனோசித்ரா)
முத்துராஜவெல அதி உணர்திறன் சுற்றாடல் வலயத்தின் ஜா-எல பகுதியை நிரப்புவதற்காக இலங்கை காணி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ள அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா மாவட்ட ஒழுங்கிணைப்புக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, பிரதேச அபிவிருத்திக் குழு மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு அனுமதியளிக்கா ஒரு நிலையில் இலங்கை காணி அபிவிருத்தி அதிகார சபை எவ்வாறு முத்துராஜவெல அதி உணர்திறன் சுற்றாடல் வலயத்தை நிரப்புவதற்கு அனுமதியளிக்க முடியும்.
ஒரு சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையை ஏற்க முடியாது.
கத்தோலிக்க சபை, மதத் தலைவர்கள், சுற்றுச் சூழல் அமைப்புகள் மற்றும் மக்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், முத்துராஜவெல அதி உணர்திறன் சுற்றாடல் வலயத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதேபோன்று இந்த நடவக்கையை துறைசார்ந்த அமைச்சருக்கு கூட அறிவிக்கப்படவில்லை. இலங்கை காணி அபிவிருத்தி அதிகார சபையின் செயல்பாடுகள் சர்ச்சைகளையும் சிக்கல்களையும் தோற்விக்கின்றன.
எனவே ஜனாதிபதி மற்றும் துறைசார் அமைச்சரான பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை குறித்த காணியில் நிரப்பு பணிகளை முன்னெடுப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment