உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றுபவர்களை நிரந்தரமாக்குங்கள் : அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற இம்ரான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 5, 2023

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றுபவர்களை நிரந்தரமாக்குங்கள் : அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற இம்ரான்

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

அதன்போது அவர்களின் கோரிக்கையினை உரிய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய இன்று (05) உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்தவை சந்தித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் நீண்ட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் கடமையாற்றுபவர்களை நிரந்தரமாக்குவது சம்பந்தமாக கலந்துரையாடினார்.

இவ்விடயம் சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆராய்ந்து பதிலளிப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment