இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 1, 2023

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ஒத்தி வைப்பு

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நாளை (02) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கு முன்னர் தெரிவித்தது.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் சவால்களை எதிர்கொள்வதற்காக இரு தரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமையவுள்ளது.

அத்துடன், நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை - இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டது

No comments:

Post a Comment