ஒன்லைன் மூலம் குறுகிய கால கடன் வழங்கும் நிறுவனங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள்! - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

ஒன்லைன் மூலம் குறுகிய கால கடன் வழங்கும் நிறுவனங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள்!

ஒன்லைன் மூலம் குறுகிய கால கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் தாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இவற்றில் பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன. மற்றும் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்கின்றன.

மேலும், இந்த நிறுவனங்களின் கைத்தொலைபேசி அப்ளிகேஷன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கைத்தொலைபேசிகளின் தரவுகள் பெறப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

வட்டி இல்லாமலோ, குறைந்த வட்டியிலோ கடன் பெறும் வசதியும், குறுகிய காலத்தில் கடன் பெறும் வசதியும் இருப்பதால் இந்த நிறுவனங்களில் ஒன்லைன் மூலம் கடன் பெற பலர் ஆசைப்படுகின்றனர்.

ஆனால், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கிய பின், தங்களுக்கு உறுதியளித்த வட்டியை, தன்னிச்சையாக மாற்றி, அதிக வட்டிக்கு பணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment