அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வினை கோருவதற்கு பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் வவுனியாவில் நேற்று (01) முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தற்போதைய சுகாதார அமைச்சரை மாற்றி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே பலரிடம் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
இப்போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment