“இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” எனும் சட்டமூலம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2023 செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி “இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” எனும் சட்டமூலம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய குறித்த சட்டமூலம் 2023ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டம் என்ற பெயரில் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
No comments:
Post a Comment