வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கொழும்பு! - News View

About Us

About Us

Breaking

Sunday, September 3, 2023

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கொழும்பு!

நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கிறது. ஆனாலும், சில பிரதேசங்களில் வறட்சியால் மக்கள் நீரின்றி கஷ்டப்படுகின்றனர்.

இன்றையதினம் (03) மேல் மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

அடைமழை மற்றும் வீசிய கடும் காற்றினால் கொழும்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வீதிகளில் வெள்ளம் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், வீதிகளில் தேங்கிக் கிடக்கும் வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment