ஏ.எஸ்.எம். சமீம் காங்யேனோடையை பிறப்பிடமாக கொண்டவர். காத்தான்குடியை வசிப்பிடமாக கொண்ட சகோதரர். ஒரு மனிதாபிமான செயற்பாட்டாளர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதிக் கொடையாளர் சம்மேளனத்தின் செயலாளர். எங்கு இரத்ததானம் நடந்தாலும் அங்கு சமீம் நிற்க தவற மாட்டார்.
காங்கேயனோடை பொது நூலகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருபவர் சமீம்.
ஆரவாரமின்றி அமைதியாக மனிதாபிமான பணியாற்றும் சமீமிடம் இந்த மனிதாபிமானமும் இருக்கிறதா என எனக்கு அன்றுதான் தெரியும்.
கடந்த வியாழக்கிழமையன்று மஞ்சந்தொடுவாய் அல் பஜ்ர் பள்ளிவாயல் மண்டபத்தில் எஸ்.எஸ்.எம். சொல்கார் நிறுவனத்தினால் இரத்தானதான முகாமொன்று இடம்பெற்றது.
இதன்போது சகோதரர் மேற்படி சமீமும் இரத்ததானம் செய்தார். இவரது இரத்தம் Bombay O என்ற வகையாகும் இந்த அரிய வகையான இரத்தம் இலங்கையில் குறித்த ஒரு சில எண்ணிக்கையிலானவர்களுக்கே இருப்பதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் டாக்டர் திருமதி அலீமா ரஹ்மான தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக அன்றையதினம் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சகோதரியும் சமீமின் மேற்படி Bombay O வகையான இரத்தத்தை சார்ந்தவர் என்பதால் அந்த சகோதரிக்கு அவசரமாக Bombay O இரத்தம் தேவைப்பட உடனடியாகவே சகோதரர் சமீம் தனது அன்றைய இரத்ததான முகாமில் இரத்தத்தை தானம் செய்தார்.
சகோதரர் சமீம் இரத்தம் வழங்க உடனடியாகவே அவரது இரத்தம் அவசரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு குறித்த குழந்தை பிரசவத்துக்காக காத்திருந்த அந்த சகோதரிக்கு வழங்கப்பட்டதாக அறிய முடிந்தது.
நம்மிடையே பலர் பலவிதமான மனிதாபிமானப் பணிகள் சமூக சேவைகளை செய்கின்றார்கள்.
சகோதரர் சமீம் இந்த இரத்ததான விடயத்தில் மிகவும் கரிசைண செலுத்தி வருபவர்.
இவரது இந்த இரத்தம் ஒரு உயிரைக் காக்க எப்படி உதவியது என்பதை கடந்த வியாழக்கிழமை அறிய முடிந்தது.
இந்த சகோதரருக்கும் இரத்ததானம் செய்யும் சகோதரர்களுக்கும் அல்லாஹ் அவர்களின் ஆயுளை நீடிப்பானாக.
எம்.எஸ்.எம். நூர்தீன்
02.09.2023
No comments:
Post a Comment