கடந்த மார்ச் மாதம் அதிகரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை மேலும் 4 மாதங்களுக்கு நீடித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, செப்டெம்பர் 08 முதல் மேலும் 4 மாதங்களுக்கு குறித்த வரி அமுலில் இருக்கும்.
கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் தலா 1 கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த ரூபா 20 எனும் விசேட பண்ட வரியை, ரூ. 30 இனால் அதிகரித்து ரூபா 50 ஆக அதனை விதிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
குறித்த வரி செப்டம்பர் வரையான 6 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்க நிதியமைச்சு தற்போது தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் எனும் வகையில், குறித்த வரியை மேலும் 4 மாதங்களுக்கு நீடித்து குறித்த வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment