2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக்கவே செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அணி வீரர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரையில் வௌியிடப்படவில்லை.
செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை அணிகளை பெயரிட அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இம்மாதம் 26 ஆம் திகதி இந்தியா புறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஒக்டோபர் 7 ஆம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment