இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் நேற்று 31 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த நிலையில், சினோபெக் லங்கா நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளை இன்று (01) அறிவித்துள்ளது.
அதன்படி ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெறறோலின் விலை 358 ரூபாவாக சினோபெக் அறிவித்துள்ள நிலையில், ஏனைய இரண்டு நிறுவனங்களும் ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 361 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன.
ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 414 ரூபாவாக சினோபெக் அறிவித்துள்ள நிலையில், ஏனைய இரண்டு நிறுவனங்களும் ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 417 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 338 ரூபாவாக சினோபெக் அறிவித்துள்ள நிலையில், ஏனைய இரண்டு நிறுவனங்களும் அதனை 341 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன.
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 356 ரூபாவாக சினோபெக் அறிவித்துள்ள நிலையில், ஏனைய இரண்டு நிறுவனங்களும் அதனை 359 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலையானது 231 ரூபாவாக மூன்று நிறுவனங்களும் நிர்ணயித்துள்ளன.
சீனாவிற்கு சொந்தமான சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் திறந்து வைத்துள்ளது.
இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment