இலங்கையில் பாலியல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என பெண்கள் கூட்டமைப்பொன்று குற்றம் சாட்டியுள்ளது.
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுதல் இரக்கமற்ற மனிதாபிமானமற்ற அவமானகரமாக நடத்தப்படுதல் போன்ற அடிப்படை உரிமை மீறல்களை இலங்கையின் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர் என அபிமானி என்ற பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டதும் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அடிக்கடி எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அபிமானி பெண்கள் கூட்டமைப்பு நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமைகள் உரிய நடைமுறைகள் மனிதாபிமானற்ற மற்ற விதத்தில் நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு போன்றவை மீறப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
தங்களை கைது செய்த பின்னர் போதைப் பொருள் வைத்திருந்த பொய்யான குற்றச்சாட்டின் கீழ் தங்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதாகவும் பொலிஸாரும் வாடிக்கையாளர்களும் தங்களை துன்புறுத்துவதாகவும் பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கள் கைதுகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றதும் நாங்கள் போதைப் பொருள் வைத்திருந்தோம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளோம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் என சகுனி மாயாதுன்ன என்ற பாலியல் தொழிலாளி தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழில் என்பது சட்டபூர்வமற்றது என்பதால் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்வார்கள் என சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பிரிவை சேர்ந்த ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் அனைத்து பிரஜைகளிற்கும் அடிப்படை உரிமை உள்ளது தடுத்து. வைப்பவர்களை தாக்குவதற்கு நாங்கள் பொலிஸாருக்கு அனுமதியளிக்கவில்லை. மேலும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பணிக்கு அமர்த்த வேண்டும் இவை நடக்காவிட்டால் முறைப்பாடு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment