உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து தசுன் சானக நீக்கப்படவுள்ளார் என நம்பகதன்மை மிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் உட்பட முக்கிய அதிகாரிகள் இது குறித்து நேற்று (19) நீண்ட நேரம் ஆராய்ந்துள்ளதோடு, இன்று (20) இது குறித்த முடிவை அவர்கள் அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருநாள் அணியின் புதிய தலைவராக குசல் மெணடிஸ் நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் சகலதுறை வீரராக தசுன்சானக அணியில் இடம்பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சகலதுறை வீரர் வணிந்து ஹசரங்க மீண்டும் காயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, திமுத் கருணாரத்னவிற்கு பதில் அணியில் அவிஸ்க பெனாண்டோ சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment