நாளை (02) முதல் பஸ் கட்டணங்களை 4.01% இனால் அதிகரிக்கவுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கும் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து பஸ் கட்டணங்களை அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியது.
இதற்கமைய தற்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச 30 ரூபாய் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமலிருக்க பஸ் சங்கத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டண திருத்த படிவம் நாளை முதல் சகல பஸ்களிலும் காட்சிப்படுத்தப்படும். அதன்படி, தற்போது 37 ரூபாவாக உள்ள கட்டணம் 38 ரூபாவாகவும், 48 ரூபாவாக உள்ள கட்டணம் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment