முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறை : இரத்தினபுரி மேல் நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 26, 2023

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறை : இரத்தினபுரி மேல் நீதிமன்றம் உத்தரவு

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்யாமலிருக்க அழுத்தம் கொடுத்த குற்றத்திற்காக, சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. 

இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன நேற்றையதினம், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சிறைத் தண்டனையுடன் 20 ஆயிரம் ரூபாவை தண்டப் பணமாக அறவிடுமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கஹவத்தை பொலிஸார் சம்பவத்தின் சந்தேகநபரான அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய முற்பட்டார்.

இந்நிலையில், அவரை கைது செய்ய வேண்டாமென, காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பிலேயே லலித் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment