மருந்து இறக்குமதியாளர்களுக்கு 13 பில்லியன் ரூபா நிலுவை - News View

About Us

About Us

Breaking

Friday, September 1, 2023

மருந்து இறக்குமதியாளர்களுக்கு 13 பில்லியன் ரூபா நிலுவை

மருந்து இறக்குமதியாளர்களுக்கு நிலுவைக் கட்டணமாக 13 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்து நிதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

கட்டம் கட்டமாக நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால் சில மருந்து இறக்குமதியாளர்கள், மருந்துகளை இறக்குமதி செய்வதில் தயக்கம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு 161 ஆக குறைவடைந்துள்ளது.

இந்த மருந்துகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை அடுத்த சில வாரங்களில் கட்டம் கட்டமாக நாட்டிற்கு கொண்டுவரப்படுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment