12 இலட்சம் தனியார் LECO மின்சார பாவனையாளர்களுக்கும் இம்மாதம் முதல் 2.5% வரி - News View

About Us

About Us

Breaking

Friday, September 29, 2023

12 இலட்சம் தனியார் LECO மின்சார பாவனையாளர்களுக்கும் இம்மாதம் முதல் 2.5% வரி

வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) மின்சார கட்டணத்துடன், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (Social Security Contribution Levy) இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 செப்டெம்பர் 08 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சேர்க்கப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இம்மாத மின்சார கட்டணப் பட்டியலில் இவ்வரி அறவிடப்படுமென நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட கட்டணப்பட்டியல்களுடன் குறித்த வரி அறவிடப்பட்டு வருகின்றது.

2022 ஆம் ஆண்டின் இல 25 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் காணப்படும் பிழை காரணமாக, அதனை LECO வாடிக்கையாளர்களின் கட்டணப் பட்டியல்களில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில் அது தற்போது சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வரியை LECO வாடிக்கையாளர்களுக்கும் அறவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

LECO எனப்படும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் சுமார் 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment