கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறிய ஆசிரியர்கள் 10 பேருக்கு இடமாற்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 18, 2023

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறிய ஆசிரியர்கள் 10 பேருக்கு இடமாற்றம்

மத்திய மாகாணத்தில் தமது வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணம், ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை மீறியதே. 

குறித்த சுற்றறிக்கையை மீறிய இந்த பத்து ஆசிரியர்கள் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 

அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் திணைக்களம் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இந்த ஆசிரியர்களில் பலர் இடமாற்றத்தை ஏற்காமல் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது. 

மேன்முறையீட்டு விசாரணையின் பின்னர் ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் சேவையை விட்டு விலகியதாகவே கருதப்படுவார் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு சோதனைப் பிரிவையும் ஆரம்பித்துள்ளது. 

வகுப்புகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் விசேட சலுகைகளை அளிப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் காரணமாக அமைச்சு தனது வகுப்பில் உள்ள பிள்ளைகளுக்கான பயிற்சி வகுப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment