ரஜினிகாந்த் நடித்து 5 மொழிகளில் வெளியான ‘ஜெயிலர்’ படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று (10) திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழகத்தில் ரூ.23 கோடி வசூல் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் ரூ.11 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.10 கோடி, கேரளாவில் ரூ.5 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ. 3 கோடி இப்படம் வசூலித்துள்ளது.
இதன் மூலம் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் வசூலை (ரூ.32 கோடி) ‘ஜெயிலர்’ முறியடித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 2023ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ‘ஜெயிலர்’ அதிகம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment