நீர்க் கட்டணம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நேற்று (02) நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நீர் பாவனையாளர்கள் நீரை பயன்படுத்தும் அளவிற்கு அமைய பல பிரிவுகளின் கீழ் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நீர்க்கட்டண அதிகரிப்பு தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது குடும்பங்களுக்கான நீர் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
1974 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சட்டத்தின் 84 ஆவது பிரிவின்படி குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் வெளியான கட்டணங்கள் ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளதோடு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நீர் வழங்கப்பட்ட அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய வீட்டுப் பாவனைக்கான கட்டணம்,
0 - 5 வரையான அலகொன்று ரூ. 35 இலிருந்து ரூ. 60 (சேவைக் கட்டணம் ரூ. 300)
6 - 10 வரையான அலகொன்று ரூ. 50 இலிருந்து ரூ. 80 (சேவைக் கட்டணம் ரூ. 300)
11 - 15 வரையான அலகொன்று ரூ. 60 இலிருந்து ரூ. 100 (சேவைக் கட்டணம் ரூ. 300)
16 - 20 வரையான அலகொன்று ரூ. 89 இலிருந்து ரூ. 110 (சேவைக் கட்டணம் ரூ. 300 இலிருந்து ரூ. 400)
21 - 25 வரையான அலகொன்று ரூ. 124 இலிருந்து ரூ. 130 (சேவைக் கட்டணம் ரூ. 300 இலிருந்து ரூ. 500)
26 - 30 வரையான அலகொன்று ரூ. 137 இலிருந்து ரூ. 160 (சேவைக் கட்டணம் ரூ. 900 இலிருந்து ரூ. 600)
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எனும் வகையில் ஜீவன் தொண்டமானால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின்படி, 30 நாட்களுக்குள் நீர் கட்டணத் தொகையை செலுத்த வாடிக்கையாளர் தவறினால், மாதாந்தம் 2.5% மேலதிக கட்டணம் அல்லது கட்டணம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையில் அவ்வப்போது வசூலிக்கப்படும்.
30 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்களின் சேவை இணைப்பை துண்டிக்க நீர் வழங்கல் சபை பொது முகாமையாளருக்கு அதிகாரம் உள்ளது.
துண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் நீர் வழங்குவதற்கான கட்டணம் மற்றும் செலவை நீர் வழங்கல் சபை பொது முகாமையாளர் முடிவு செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட மாதத்திற்கு நீரைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்த சேவைக் கட்டணம் மற்றும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படும்.
No comments:
Post a Comment