இலங்கையில் பல மடங்காக அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 29, 2023

இலங்கையில் பல மடங்காக அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்

2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

தேசிய எஸ்டிடி - எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இதே காலாண்டு பகுதியில் எயிட்சினால் 13 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment