எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு - அறிவிப்பு நாளை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு - அறிவிப்பு நாளை

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, எரிவாயுவின் விலையில் நாளை (04) திருத்தம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

உலக சந்தையில் தற்போது 87 டொலருக்கும் அதிகமான விலையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

உலக சந்தையின் விலை மாற்றங்களுக்கேற்ப, இலங்கையில் எரிவாயுவின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது.

இதன் காரணமாக, எரிவாயு விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் சமையல் எரிவாயு புதிய விலை தொடர்பான அறிவித்தல் நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment