நாட்டின் அரச வைத்தியசாலைகளில் அண்மையில் இடம்பெற்ற ஆறு மரணங்களில் ஐந்து மரணங்கள், அனாபிலாக்ஸி என்ற உயிராபத்தை ஏற்படுத்தும் ஒவ்வாமையினால் ஏற்பட்டதாக நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
மருந்துகள் ஒவ்வாமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இது குறித்த அறிக்கையில் நிபுணர்கள் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அனாபிலிக்ஸ் ஒவ்வாமை மேலாண்மை, அவசரகால மேலாண்மை, அவசரகால மேலாண்மை தொடர்பான தேசிய மற்றும் நிறுவன வழிகாட்டல்கள், நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டுமென நிபுணர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment