வவுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின்போது நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை (18) அடக்கம் செய்யப்பட்டது.
வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்றபோது மைதானத்தின் அருகில் இருந்த நீர் குழியில் விழுந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரு மாணவர்களின் ஜனசா பட்டாணிச்சூர் பள்ளிவாசலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பட்டாணிச்சூர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுத்தீனும், வலயக் கல்வி திணைக்களத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டதுடன், பலரதும் கண்ணீருக்கு மத்தியில் இருவரது ஜனாஸாக்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வவுனியா தீபன்
No comments:
Post a Comment