இலங்கையில் அமெரிக்கத் தூதுவரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் கடிதமொன்றை தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளனர்.
66 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதாக கூறப்படும் இந்த கடிதத்தின் பிரதியை தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று கையளித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதியொருவர் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
அமெரிக்கத் தூதுவர் அதிகளவில் இலங்கையின் உள்விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துகின்றார் எனவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன எனவும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் நுவான் பலண்டுவாவ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் இலங்கை இராணுவ தளபதியைக்கூட சந்தித்துள்ளார். ஏனைய அதிகாரிகளையும் சந்தித்துள்ள அவர் உத்தரவுகளை வழங்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவரின் நடவடிக்கைகள் குறித்து அவரை அழைத்து ஆலோசனை வழங்க வேண்டிய பொறுப்பு வெளிவிவகார அமைச்சருக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment