கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில் கொரியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு உதவியாகவும், விவசாயிகளுக்கு சிறந்த விற்பனை விலையின் மூலமாக வருமானம் ஈட்டக் கூடியதாகவும் அமையும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.
கொரியா அரிசி உணவுப் பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (09) சௌமியபவானில் இடம்பெற்றபோதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதன் ஊடாக மலையகத்திற்கும் விநியோகத்தை ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment