துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி : மோட்டார் சைக்கிள் வந்த இருவர் தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 30, 2023

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி : மோட்டார் சைக்கிள் வந்த இருவர் தப்பியோட்டம்

கொழும்பு 12, வாழைத்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை (30) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொழும்பு 12, சவுண்டர்ஸ் பிளேஸை சேர்ந்த 20 வயதுடைய காவிந்த தில்ஷான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் வாழைத்தோட்டம் மார்டீஸ் ஒழுங்கையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிடுவதற்காக வருகை தந்தபோதே மோட்டார் சைக்கிள் வந்த இனந்தெரியாத இருவர் அந்த ஹோட்டலுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சொல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து வாழைத்தோட்ட பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை காணப்பட்டதுடன் உடனடியாக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உயர் அதிகாரிகள், விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்து துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள CCTV கெமராக்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் பல்வேறு தரப்பினரின் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment