கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன்உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக ஆராயமால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவத் தரப்பினரும் முடிவிற்கு வருவது தவறு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மரணத்திற்கான காரணம் என்னவென்பதை அறிவதற்காக முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தவர்கள் மருத்துவர்களின் கவனமின்மையே உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்படாத சிறுநீரகமே அகற்றப்பட்டது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment