பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் : ஒருவர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 30, 2023

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் : ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது சனிக்கிழமை (29) அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் என்பனவற்றை உடைத்து சேதமாக்கியுள்ளதுடன், அங்கு தங்கி இருந்த மாணவன் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

No comments:

Post a Comment