இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவிக்க தீய சக்திகள் முயற்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 13, 2023

இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவிக்க தீய சக்திகள் முயற்சி

மொறவெவ பிரதேசத்தில் இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் முகமாக தீய சக்திகள் செயற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, மொரவெவ பிரதேச செயலக பிரிவின் கித்துலூத்து கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நான்காம் கண்டம் பகுதியில் கடந்த போயா தினத்தன்று அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ் இனம் தெரியாத நபர்களினால் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் புலனாய்வுத் துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வாரத்தின் பின்னர் அப்பகுதியில் ஒரு அடி உயரமான புத்தர் சிலை ஒன்றும் வைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்களிடையே இன முரன்பாடுகள் ஏற்பட்டதையடுத்து தற்போது அவ்விரு சிலைகளும் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் இரு இனத்தவர்களும் சுமூகமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்ற நிலையில் இப்பகுதியில் மீண்டும் புத்தர் சிலையை வைத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment