கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆங்கில தினப்போட்டியில் மட் /மம/ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திலிருந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை 45 மாணவிகள் பெற்று கோட்டத்தில் முதலாம் இடத்தை தனதாக்கி கொண்டது. இதிலிருந்து 33 மாணவிகள் வலய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆங்கில தினப்போட்டி நிகழ்ச்சியான.
வாய் மொழி ஆங்கிலப் போட்டியான
ஆங்கில கவிதை நயத்தல் போட்டி (Recitation), முன்னேற்பாடிறின்றி பேசுதல், (Oratory, Impromptu) முன்னேற்பாடுடன் பேசுதல் (Oratory, Prompt) போட்டியிலிருந்து 8 மாணவிகள் முதலாமிடத்தையும், 6 மாணவிகள் இரண்டாம் இடத்தையும், 2 மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
எழுத்து ரீதியான நிகழ்ச்சியான
பாரத்து எழுதுதல் (Hand Writing, Print and Cursive), சொல்வதெழுத்தல் (Dictation), ஆக்க பூர்வமாக எழுதுதல் (Creative Writing ) போட்டி நிகழ்ச்சிகளிலிருந்து 11 மாணவிகள் முதலாமிடத்தையும், 8 மாணவிகள் இரண்டாம் இடத்தையும், 10 மாணவிகள் மூன்றாம் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆங்கில போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களை பெறும் மாணவர்கள் வலய மட்ட போட்டி செல்வர் இதனடிப்படையில் மட்/மம/ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்திலிருந்து இம்முறை 33 மாணவிகள் வலய மட்ட போட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வித்தியாலய அதிபர் ஏ.எல். அபுல் ஹசனினால் ஆங்கில தினப் போட்டிக்கு பயிற்றுவித்த ஆங்கில பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்களான திருமதி ஏ.பஸ்லியா, திருமதி ஏ.எம்,யு. பர்சானா, திருமதி ஏ.எம்.யு. சபீனா, திருமதி எம்.ஜ பஸீனா பானு, திருமதி ஏ.றிஸ்வானா, திருமதி எம்.பி எஸ் றிகானா, திரு ஏ.எஸ்.எம். சதீக் ஆகியோருக்கு தனது நன்றியறிதலை தெரிவித்துக் கொண்டார்.
அத்தோடு, இவ்வருட பாடசாலை முதலாம் தவணைக்குள் பல போட்டி நிகழ்ச்சிகளும் மற்றும் முதலாம் தவணைப் பரீட்சைக்குள்ளும் இவ்வாசிரியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் மாணவிகளை தெரிவு செய்து பயிற்றுவித்தமை மிகவும் பாரட்டத்தக்கது என்றும் ஆங்கில தினப் போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ஏ.எஸ்.எம். சதீக்
No comments:
Post a Comment